பேருந்தில் அதிக சத்தத்துடன் ஒலித்த பாடல் - சாரதிக்கு 32500 ரூபா அபராதம்

Report Print Vethu Vethu in சமூகம்

பேருந்தில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒலிபரப்பிய சாரதிக்கு காலி நீதிமன்றம் 32500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தில் தனியார் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த சாரதிக்கு அபராதம் விதிப்பதாக காலி நீதிமன்ற நீதிபதி பவித்ரா சன்ஜீவனி பத்திரனி உத்தரவிடடுள்ளார்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்மாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்தமைக்காக 7500 ரூபாய் அபராதமும், காலாவதியான அனுமதி பத்திரத்தை வைத்திருந்தமைக்காக 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


you may like this video