ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளின் கோரிக்கை நிராகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளை எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்ற கோப் குழுவின் முன்பாக முன்னிலையாகுமாறு கோரப்பட்டுள்ளது.

ஏயார்பஸ் நிறுவனத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வதற்காக முன்னைய நிர்வாகத்தினர் அந்த நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகையான லஞ்சம் பெற்றுக்கொண்டதாக வெளியான தகவல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று தம்மால் பிரசன்னமாக முடியாது என்றும், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகம் என்பதால் தமக்கு விடயங்களை தெரிந்து கொள்ள காலம் தேவை என்றும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அதிகாரிகள் கோப் குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் இந்த வேண்டுகோளை கோப் குழு நிராகரித்துள்ளது. அத்துடன் ஏற்கனவே கோரியப்படி எதிர்வரும் 19ஆம் திகதி முன்னிலையாகுமாறு கோப் குழு கோரியுள்ளது.

Latest Offers