கல்கிஸ்ஸ பகுதியில் இன்று காலை ஒருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் இன்று அதிகாலை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியானது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த பகுதியில் அடிக்கடி சிறப்பு அதிரடி படையினர் சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers