கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியின் மைய பகுதியில் காணப்படும் சீமெந்து கட்டிலுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகமாக சென்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் மோட்டார் சைக்கிளினை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers