ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞனொருவன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கல்கிசை - படோவிட்ட பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் 1.15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்து கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்றிரவு அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

இதன்போது படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் அணியொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

சந்தேக நபரை கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers