முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கு எதிரான பரிசோதனை நடவடிக்கை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்களும்,பொலிஸாரும் இணைந்து டெங்கு ஒழிப்புக்கு எதிரான பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிப்பொத்தானை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இச்சோதனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளையும் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு டெங்கின் தாக்கம் மற்றும் சூழலை அசுத்தமாக வைத்திருப்பதால் ஏற்படும் நோய்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அண்மையில் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் 13 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.