தலவாக்கலை பகுதியில் லொறியொன்று குடைசாய்வு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் குறித்த லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த லொறியிலிருந்த 7000 கிலோ அரிசி பொதிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers