முச்சக்கரவண்டி விபத்து - மூவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா, கொலதென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.