அசுர வேகம் எடுத்துள்ள கொரோனா! மலையென உயரும் மரணங்களின் எண்ணிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

சீனாவின் ஹூபாய் மாகாணத்தில் நேற்று மாத்திரம் கொவாட் 19 என்ற கொரோனாவைரஸ் தாக்கத்தினால் 242 பேர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இந்த தொற்றினால் மரணமானவர்களின் அதிக எண்ணிக்கை இதுவாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் இந்த மரணங்களுடன் மொத்தமாக கொவாட்19 தாக்கத்தினால் மரணமானவர்களின் எண்ணிக்கை 1355 ஆக உயர்ந்துள்ளது.

இதனைவிட கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 14840 ஆகும்.

இதேவேளை ஹூபாயின் நிர்வாகத்தில் சீன அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

சங்காய் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் யிங் யொங் ஹூபாயின் புதிய செயலாளராக சீன கொம்யூனிஸ கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பதவியில் இருந்தவர் வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.