ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பருத்தித்துறையில் தீயிட்டு அழிப்பு!

Report Print Sumi in சமூகம்

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலோ 500 கிராம் அபின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று மாலை கரவெட்டி சோனப்புத்திடல் என்ற இடத்தில் இவை தீயிட்டு அழிக்கப்பட்டன.

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் சந்தேகநபர்களின்றி மீட்கப்பட்ட அதிகளவிலான போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும், சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுதியான அபின் போதைப்பொருளும் இவ்வாறு அழிக்கப்பட்டன.