கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ராஜபக்ஷர்களுக்கு நெருக்கமான உறவினர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது மிக் ரக விமான கொள்வனவு சர்ச்சையில் உதயங்க வீரதுங்க சிக்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் மஸ்கட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் வருகைத்தந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரான இன்டர்போல் பிடியாணை பிறப்பித்திருந்தது.

உதயங்க வீரதுங்க, சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video