மட்டக்களப்பு மாநகரசபையின் 30வது அமர்வு!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 30வது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

மாநகரசபையின் மக்கள் சபை அமைக்கப்பட்டு 30வது அமர்வின் ஆரம்பத்தில் மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டு உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாநகரசபையின் முதல்வரின் தலைமையுரை இடம்பெற்று மாநகரசபையின் முன்மொழிவுகள் மாநகர முதல்வரினால் வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பிலும், முன்னெடுப்புகள் தொடர்பிலும் மாநகரசபை உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது மட்டக்களப்பு நகரில் உள்ள விளையாட்டு பூங்காவினை அங்கிருந்து அகற்றி வேறு ஒரு இடத்தில் அமைப்பது குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல விளையாட்டுக்கழகங்கள் பதிவு செய்யப்பட்டு விளையாட்டு மைதானங்களையும் கொண்டிருக்கின்ற போதிலும் அடைவு மட்டம் இல்லாத நிலையிலுள்ளதாகவும், அவ்வாறான விளையாட்டு கழகங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு மாநரசபை உறுப்பினர் து.மதனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரசபையின் இன்றைய அமர்வின் போது மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றிற்கு முதல்வரினால் பதிலளிக்கும் வகையிலான கருத்துகளும் வழங்கப்பட்டுள்ளன.