திருகோணமலையில் வாள்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் நால்வர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மற்றும் கந்தளாயில் அலைபேசி கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யபட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் கந்தளாய் பகுதிகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள்,இரண்டு மடிக்கணணிகள்,பற்றரிகள்,சாச்சர்,ஒரு இலட்சம் ரூபா பணம் போன்ற பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைக்குண்டு,வாள்கள்,சிறிய கத்தி,மடிக்கணணி 2,பணம், அலைபேசிகள்,மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றன கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் நால்வரையும் EP CAN 8847 இலக்கமுடைய மோட்டார் வாகனமொன்றில் தம்பலகாமம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காத்தான்குடி,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 25,18,19 மற்றும் 34 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களை தடுத்து வைத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு , நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.