காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் நடக்கும் மோசமான செயற்பாடுகள்! பெற்றோர் கடும் எதிர்ப்பு

Report Print Vethu Vethu in சமூகம்
2943Shares

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த கடைகள் திக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து காதலர் தினத்திற்காக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாணவர்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கடைத் தொகுதிகளுக்கு, மாநகர சபைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த கடைகளில் மாணவர்கள் காதலர் தின பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து யாழ்ப்பாண மாநகர சபைக்கு இது தொடர்பில் மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் அந்த கடைகைளை அகற்றுவதற்கு யாழ். மாநாகர சபை நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் கோபமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


you may like this video