திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
201Shares

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரம் 1 ஐ சேர்ந்த ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.