அஜித் பிரசன்ன தொடர்ந்தும் விளக்கமறியல்

Report Print Steephen Steephen in சமூகம்

ஓய்வுபெற்ற இராணுவ மேஜரும், சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் அஜித் பிரசன்ன உட்பட மூன்று சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சாட்சியாளர்களுக்கு தடையேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அஜித் பிரசன்ன மற்றும் இரண்டு முன்னாள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.