கல்மடு கடற்கரையில் அடையாளந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Report Print Navoj in சமூகம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் அடையாளந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்மடு கடற்கரை பகுதி மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய 50 மற்றும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயோதிப பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுங்கி இருக்கலாம் என்றும், சடலத்தை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் தெவித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.