ஈஸ்டர் தாக்குதல்: வர்த்தகர் இப்ராஹிம் உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு ஷெங்கிரீலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் அஹமட் என்பவரின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனால், சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்டகாலம் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்திருந்தது.