குளவி தாக்குதலுக்கு உள்ளான அவுஸ்திரேலிய கணவன், மனைவி

Report Print Steephen Steephen in சமூகம்

பதுளை எல்ல ஆருக்கு நவய பாலத்தை பார்க்க சென்றிருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இன்று பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

44 மற்றும் 43 வயதான அவுஸ்திரேலியாவை சேர்ந்த கணவன், மனைவியே குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாலத்தில் இருந்த குளவி கூட்டில் இருந்த குளவிகள் திடீரென குழம்பியதில் இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.