புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம்

Report Print Navoj in சமூகம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பதிவு செய்வது தொடர்பிலான செயற்பாடுகளை முன்நகர்த்தும் முகமாக அக்கட்சியின் தலைவர் உட்பட குழுவினர் இன்றைய தினம் இராஜகிரியவில் அமைந்துள்ள தோதல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா மற்றும் அதன் செயலாளர் நா.அன்ரனி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி என்ற அடிப்படையில் புனாவாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பதிவு செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து அச் செயற்பாட்டின் மேலதிக நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் முகமாக மேற்படி விஜயம் அமைந்ததாகக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.