யாழ். தாளையடி பகுதியில் கஞ்சாவுடன் நால்வர் கைது

Report Print Yathu in சமூகம்

யாழ். பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாளையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ கிராம் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய தாளையடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் மொத்தமாக 3 1/2 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் கூறியதுடன், மோட்டார் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.