புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் புதையல் தோண்டினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் போராளி உட்பட இரண்டு பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று மாலை கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் புதையல் தோண்டுவதற்கு தயாராக இருந்த இரண்டு பேரை கைதுசெய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் ஆயுதங்கள் உள்ளிட்ட பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.