வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு வழங்கும் ஆதரவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களின் பிள்ளைகளின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணிகளை தேடி தரும் தரப்பாக வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களை கருத வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers