கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை விவகாரம்! பரவலாக சுவரொட்டிகள்

Report Print Varunan in சமூகம்
128Shares

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்றைய தினம் பிரதான வீதிகள், கடைகள், சந்தைகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெளியேறு..! வெளியேறு..! ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு, பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று என அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகளுக்கு கல்முனையை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட தர தாதிய உத்தியோகத்தராக ஆர்.தேவாமிர்ததேவி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.