ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸின் முதல் தாக்கம்! எகிப்தில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்

Report Print Ajith Ajith in சமூகம்

கொவாட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எகிப்தில் ஒருவர் உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் இதுவே ஆபிரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட எந்த நாட்டவர் என்ற தகவலை எகிப்திய சுகாதார அமைச்சு வெளியிடவில்லை.

குறித்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எகிப்து சீனாவுக்கு விமான சேவைகளை ரத்துச்செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து 101 எகிப்தியர்களும் அங்கிருந்து நாட்டுக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ எட்டியுள்ளது.