மாங்குளம் மனிதப் புதைகுழி! பாரிய படுகுழியின் தடயம்

Report Print Ajith Ajith in சமூகம்
315Shares

முல்லைத்தீவு மாங்குளம் வைத்திசாலை வளவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பாரிய மனித படுகுழிக்கான தடயமாக இருக்கலாம் என்று இராணுவம் சந்தேகிக்கிறது.

சிங்கள வார இதழ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

இந்த இடத்தில் இருந்து பெருந்தொகையான மனித எலும்புகள் எலும்புத்துண்டுகள் மற்றும் ஆடைகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 12ஆம் திகதி புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே இந்த மனித எச்சங்கள் வெளிப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட ஆடைகளில் ஆண்கள் அணியும் சாரங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் 2018ஆம் ஆண்டே மன்னாரில் பாரிய மனித படுகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 300 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் 28 எச்சங்கள் சிறுவர்களுடையது. எனினும் இந்த எச்சங்கள் காலணித்துவ காலத்தில் உள்ளவை என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.