திருகோணமலை - மஹதிவுல்வெ வைத்தியசாலையை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
48Shares

கிராமிய வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைப்பாடுகளை நேரடியாக கண்டறியும் நோக்கிலும், எதிர்காலத்தில் வைத்தியசாலைகளினுடைய தேவைப்பாடுகளை முடியுமானளவு பூர்த்தி செய்யும் நோக்கிலும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தலைமையிலான குழுவினர் திருகோணமலை பிரதேச வைத்தியசாலைகளுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று மொரவெவ பிரதேசத்திலுள்ள மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய பராமரிப்பு நிலையம் போன்றவற்றிற்கு இந்த விஜயம் மேற்கொள்ளப்ப்பட்டிருந்தது.

இவ்விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைப்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து எதிர்காலத்தில் நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் வைத்தியசாலைகளில் காணப்படும் சிற்றூழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை நோயாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று சிற்றூழியர்கள், நோயாளர்களை கவனிக்கும் விதங்கள் குறித்தும் ஆராய உள்ளதாகவும் நோயாளர்களின் மனங்களை புண்படுத்தும் விதத்தில் செயற்படும் ஊழியர்களுக்கு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.