கல்மடு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Report Print Navoj in சமூகம்
91Shares

கல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விநாயகபுரம் 6ம் குறுக்கை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கந்தன் தெய்வானை (லட்சுமி) (வயது 68) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணவனை இழந்த நிலையில் தனது மகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியில் வந்த சந்தர்ப்பத்திலயே நேற்று மதியம் சடலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இம் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் விசாரணைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.