சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இந்தியர்கள் உட்பட 5 பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
104Shares

சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த இந்திய பிரஜைகள் இருவர் உட்பட 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் வடக்கு பகுதி கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்குரிய படகை சோதனையிட்ட போது இவர்களை கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கைக்குள் வர முயற்சித்துள்ளதாக சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 7 வயதான சிறுமி, பெண், இரண்டு ஆண்கள் அடங்குகின்றனர். இவர்கள் இரண்டு பேர் இலங்கையர்கள் என கடற்படையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.