படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் குடியிருந்தவர்களை அச்சுறுத்தி வெளியேற்றிய பெண்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் வீடொன்றில் வாழ்ந்து வந்த குடும்பத்தை வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் பலவந்தமாக வெளியேற்றி வாயில் கதவைப்பூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம், கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, உதயநகர்ப் பகுதியில் நீண்டகாலமாக புலிகளின் பயன்பாட்டில் இருந்து பின்னர் படையினர் கட்டுப்பாட்டில் இருந்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட காணியொன்றில் கடந்த ஆறுவருடங்களாக குடும்பமொன்று வசித்து வந்துள்ளது.

குறித்த காணிக்கு உரிமை கோரிவரும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒருவர், குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்ப பெண் வெளியில் சென்றிருந்த சமயம் கிளிநொச்சியைச் சேர்ந்த வர்த்தகருடன் இணைந்து வீட்டுக்குச் சென்று வீட்டிலிருந்த இருபிள்ளைகளையும் வெளியேற்றி விட்டு அவர்களது எந்தப் பொருட்களையும் எடுக்க விடாது வீட்டுக் கதவைப் பூட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.