போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உதவுகின்றனர்: மகிந்தானந்த

Report Print Steephen Steephen in சமூகம்
43Shares

நாலப்பிட்டி பிரதேசத்தில் சுமார் 500 பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும் நகரில் உள்ள மருந்து கடை உரிமையாளர்களே போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி வைபவ மண்டபத்தில் இன்று போதைப் பொருள் அற்ற நாவலப்பிட்டி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு அடிமையான மூன்று பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாவலப்பிட்டியில் போதைப் பொருள் விற்பனையை மேற்கொள்ள சில பொலிஸ் அதிகாரிகளும், சில முச்சக்கர வண்டி சாரதிகளும் உதவுகின்றனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்து, புதிய பொறுப்பதிகாரி பொறுப்பேற்ற பின்னர் நகரில் போதைப் பொருள் விற்பனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திற்குள் போதைப் பொருள் விற்பனையை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.