கொழும்பில் களியாட்ட விடுதிக்குள் ஆண்களுடன் சிக்கிய பெண்

Report Print Vethu Vethu in சமூகம்
668Shares

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதியில் பெண் ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களியாட்ட விடுதிக்குள் இன்று அதிகாலை போதை பொருள் விருந்து ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், நபர் ஒருவரை ஈடுபடுத்தி இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொக்கேன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.