சீசெல்ஸ் நாட்டிற்கு படகுகளை பரிசளித்த இலங்கை

Report Print Manju in சமூகம்
192Shares

கடல் கண்காணிப்புக்கு உதவ இலங்கை அரசாங்கத்தால் பரிசளிக்கப்பட்ட இரண்டு புதிய படகுகள் நேற்று வெள்ளிக்கிழமை சீஷெல்ஸ் கடலோர காவல்படை கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு படகுகளும் கடந்த வாரம் ஐ.என்.எஸ்.ஐராவட் இந்திய கடற்படைக் கப்பலில் சீஷெல்ஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சீஷெல்ஸின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசு இதனைச்செய்துள்ளது.

இந்த படகுகள் கண்காணிப்பு, விரைவான தலையீடு மற்றும் கடல் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும், கடல்சார் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை அதிகரிக்கும் என சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளின் தலைவர் கிளிஃபோர்ட் ரோஸ்லைன் தெரிவித்துள்ளார்.

சீஷெல்ஸ் கடலோர காவல்படையின் அதிகாரிகள் இலங்கையில் மூன்று வார பயிற்சி வகுப்பை மேற்கொண்டனர். பயிற்சியின்போது அவர்கள் படகுகளை எவ்வாறு இயக்குவது என்பதை அறிந்து கொண்டனர்.

"இரண்டுபடகுகளும் சோதனை செய்யப்பட்டு, தங்களது உள்ளூர் கடலோர காவல்படை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புப் படைகளின் தலைவர் ரோஸ்லைன் மேலும் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு ஒக்டோபரில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவிடம் சீஷெல்ஸ் ஜனாதிபதி விடுத்து கோரிக்கையைத் தொடர்ந்து இந்த படகுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக உயர்ந்த தரங்களுக்கு இணங்க இந்த படகைச் செய்துள்ள இலங்கை கடற்படைக்கு தருஷி குணதிலக நன்றியைத் தெரிவித்தார்.