வடக்கில் தற்கொலைகளை தடுக்க கைகொடுக்கும் அமைப்பு உதயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
54Shares

வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் 'கை கொடுக்கும் நண்பர்கள்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக எவ்வித ஊதியமும் இன்றி அவர்களுக்காக சேவையாற்ற தயராகவுள்ள கை கொடுக்கும் நண்பர்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்களுக்கான பயிற்சி பாசாறை வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலய மண்டபத்தில் இன்று காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

இதன் பொது தொண்டர் ஊழியர்களுக்கு தற்கொலைகள் ஏன் இடம்பெறுகின்ற அதற்காக தீர்வினை எவ்வாறு வழங்குவது , அவர்களுடன் எவ்வாறு அணுகுவது தொடர்பாக சமூக ஆர்வளர் நித்தியானந்தன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.