மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மனிதவளம் அரிய வளம் அதை பாதியில் அழிக்காதே, மரணத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு துணிவு இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட எதற்கு அச்சம், தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது, உங்கள் வாழ்க்கை வீழ்ந்து போகிறதா?முழுமையான நம்பிக்கையுடன் எம்மிடம் பேசுங்கள் என குறிப்பிட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.