வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கை பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அம்பலம்

Report Print Vethu Vethu in சமூகம்
268Shares

மத்திய கிழக்கு நாட்டுக்கு பணியாளர்களாக செல்லும் இலங்கை பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை பெண்களை அல் - என் நகர முகவர் நிலையத்தில் பலவந்தமாக தடுத்து வைத்து விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 47இற்கும் அதிகமான பெண்கள் இன்னமும் அந்த முகவர் நிலையத்தில் தடுத்து வைத்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

வீட்டு பணிப்பெண்களாக சென்று ஐக்கிய அரவு எமிரகத்தில் பல்வேறு சித்திரவதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பிய வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை முகவர்கள் சிலரினாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.