புலிகளின் தங்கத்தை தேடிய பொலிஸார் வெறும் கையுடன் திரும்பினர்

Report Print Steephen Steephen in சமூகம்
54Shares

விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அவர்களின் தமிழீழ வைப்பகம் இயங்கியதாக கூறப்படும் கனகராயன்குளம் பிரதேசத்தில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கு அமைய கனகராயன்குளம் பொலிஸ் அதிகாரிகள் இந்த அகழாய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இடத்தில் அகழ்வை மேற்கொண்ட மூன்று பேர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்தே நீதிமன்ற அனுமதியுடன் அந்த இடத்தை பொலிஸார் தோண்டியுள்ளனர்.

இதன் போது வவுனியா நீதவான் நீதிமன்ற அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவு, இராணுவ அதிகாரிகள், பிரதேச கிராம சேவகர் உள்ளிட்டோர் பிரசன்னமாகி இருந்தனர்.

நான்கு மணி நேரத்திற்கும் மேல் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எதுவும் கிடைக்கவில்லை. இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தங்கம் மற்றும் பணம் என்பன இருக்கும் என்ற நம்பிக்கையில், சிலர் சட்டவிரோதமான அகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.