இராணுவ முகாமில் தற்கொலை செய்துக்கொண்ட இராணுவ சிப்பாய்! விசாரணைகள் ஆரம்பம்

Report Print Steephen Steephen in சமூகம்

சட்டவிரோதமாக கடமையில் இருந்து விலகிச் சென்று மீண்டும் கடமைக்கு திரும்பாமல் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இராணுவ அதிகாரி பொது மன்னிப்பின் கீழ் சரணடைந்த நிலையில் இராணுவ முகாமில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அனுராதபுரம், பண்டுலகம இராணுவ முகாமின் மூன்றாவது படையணியில் சரணடைந்த கல்கமுவ மஹனான்னேரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான திஸாநாயக்க முதியன்சலாகே எரங்க தர்ஷன திஸாநாயக்க என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து இராணுவ முகாமின் மேஜர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இளைஞன் கடந்த 8ம் திகதி இராணுவ முகாமுக்கு வந்து சரணடைந்து மீண்டும் சேவையில் ஈடுபட்டிருந்ததுடன், நேற்று காலை 6.15 அளவில் முகாமில் உள்ள மரம் ஒன்றில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையெனவும்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.