இலங்கையில் கொரோனா தொடர்பில் உன்னிப்பான கவனம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொடர்பில் உன்னிப்பான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மீளாய்வுகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளையும் மீளாய்வு ஒன்றுக்கூடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்றில் பயணிகளை இலகுவில் பரிசோதனை செய்துக்கொள்ள உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 12பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.