திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமுனுபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றும் உழவு இயந்திரமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கோமரங்கடவல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் மொரவெவ, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த டிலான் சமில குமார என்பவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.