மொபைல் காப்பீட்டு பதிவுகளில் முறைகேடு

Report Print Mohan Mohan in சமூகம்
34Shares

முல்லைத்தீவில் மொபைல் காப்பீட்டு பதிவுகளை மேற்கொண்டுவரும் நிறுவனம் சுமர் 25 ஆயிரம் பேரிடம் இருந்தும் நாளொன்று 75000 ரூபாய் அறவிடுவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி மொபைல் காப்புறுதி பதிவு செய்த ஒரு நபரின் கையடக்க தொலைபேசியில் இருந்து குறித்த நிறுவனம் ஒரு நாளுக்கு 3 ரூபாய் அறவிடுகின்றது.

எனினும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் முகவர்களினால் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தின்படி விபத்துக்களினால் அல்லது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு காப்புறுதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விளக்கத்தை அறிய முற்படும் வாடிக்கையாளர்களுடன் குறித்த நிறுவனம் சிங்கள மொழியில் உரையாற்றுவதினால் பூரண விளக்கம் பெறமுடியவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனோடு சம்மந்தப்படும் தொலைத் தொடர்பு நிறுவனம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.