ஜப்பானில் மோசடியான முறையில் எரிபொருள் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கையர் வேறு நபர்களுடன் இணைந்து இன்னொருவரின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பானின் இபாரகி பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் 40000 லீட்டர் எரிபொருள் மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் டொக்கியோ பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த பிராந்தியத்தில் உள்ள 10 எரிபொருள் நிலையங்களில் 4 மில்லியன் யென்னிற்கு அதிகமான தொகை பெறுமதியிலான எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர் 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்படுகின்றது.