நெத்தலியாறு பாலம் போதுமான அளவு உயர்த்தப்படவில்லை என்பதால் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் பாலம் உயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குறித்த வட்டார பிரதேசசபை உறுப்பினர் ஜீவராஜா கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் பாலத்தை உயர்த்துமாறு எமது பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தார்கள். அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.
அதன்போது எமது மக்களின் கோரிக்கை அடங்கிய கடிதம் பொது மக்களினால் நாட்டின் ஜனாதிபதி மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் பாலம் உயர்த்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியை சேர்ந்தவன் என்ற வகையிலும் குறித்த வட்டார பிரதேசசபை உறுப்பினர் என்ற வகையிலும் பாலத்தை உடனடியாக உயர்த்த உழைத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.