இந்திய கடற்றொழிலாளர்கள் 11 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் அனலைத்தீவு கடற்பரப்பில் வைத்து அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

3 படகுகளில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை கடற்படையின் எலரா கப்பல் மூலம் இலங்கை கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மருத்துவ சோதனைகளின் பின் அவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.