கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளதாக தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

கொவிட் 19 என அறியப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 1669 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் உலகளாவிய ரீதியில் இதுவரை 69000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வரை சீனாவில் இந்த தொற்றினால் 68500 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் அங்கு 142 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

ஆசியாவுக்கு வெளியே நேற்று பிரான்ஸில் ஒருவர் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சீனாவில் மாத்திரம் இதுவரை கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட 9500 பேர் வீடு திரும்பியுள்ளனர்.