இந்தியாவின் நிதியுதவியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள்

Report Print Steephen Steephen in சமூகம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஹட்டன், வெலிஓயா தோட்டத்தின் கீழ் பிரிவில் தோட்ட தொழிலாளர்களுக்காக 50 வீடுகளை நிர்மாணிக்க இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான பதில் இந்திய உயரஸ்தானிகர் வினோத் ஜே.ஜேகோப், அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் அடிக்கல் நட்டு, வீடமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

ஒரு வீட்டை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் 10 லட்சம் ரூபாவையும் இலங்கை அரசாங்கம் 2 லட்சம் ரூபாவையும் செலவிட்டு மொத்தமாக 12 இலட்சத்தில் ஒரு வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது.

7 பேர்ச்சஸ் காணியுடன் 750 சதுர அடி அளவான வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. வரவேற்பறை, இரண்டு அறைகள், சமையல் அறை, கழிவறை வசதிகளுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகி்ன்றன.

அத்துடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் பாதை வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன.

வீடுகளை நிர்மாணித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் போது அனைத்து வீடுகளுக்கும் காணி உறுதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.