ஹட்டன் - ருவன்புர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீப்பரவல்

Report Print Ajith Ajith in சமூகம்

ஹட்டன் - ருவன்புர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இன்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர ஹட்டன் - டிக்கோயா நகரசபையினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் மலைப்பகுதிக்குள் உபகரணங்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளமையால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி தீயினால் நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீயணைப்புக்காக விமானப்படையினரின் உதவி கோரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.