திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து! ஒருவர் பலி, மற்றுமொருவர் வைத்தியசாலையில்

Report Print Navoj in சமூகம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்துடன் மோட்டார்சைக்கிளொன்று மோதியதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் பின் பக்கத்தில் அமர்ந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளதுடன், மற்றையவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்மன் (வயது 33) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.