வவுனியாவில் குடும்பப் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய கணவரின் உறவினர்

Report Print Theesan in சமூகம்
136Shares

வவுனியா - சாளம்பைகுளம் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பப் பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று மாலை வீட்டில் இருந்த சமயம் அவரது கணவரின் உறவினர் கத்தியால் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த அஸ்மா (வயது 30) என்ற இரு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.