கொரோனா வைரஸ் தொற்று? சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சீன நாட்டவர் சூரியவெவ நவதகஸ்வெவ பகுதியில் சேவை செய்யும் போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய சீன நாட்டவர் 36 ஆம் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த சீன நாட்டவரின் நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவரை கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


you may like this video